×

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் களப்பயணம்

திசையன்விளை, பிப்.7:  திசையன்விளை வி.எஸ்.ஆர்.இண்டர்நேசனல் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் மூலப்பொருளை பயன்படுத்தி இரு அணு உலைகளிலும் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும், அது எந்தெந்த மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது என்பது குறித்தும் படக்காட்சிகளோடும், 52 வகையான மாதிரிகளோடும் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் மாணவர்களுக்கு விளக்கினார்.அத்துடன் மின்சாரம் தயாரிப்பு களத்தை சுற்றிப் பார்த்ததுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கும், மனித உயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை குறித்தும் மேலாளர் விளக்கினார். அணு உலையில் இருந்து வெளியேறக்கூடிய புளுட்டோனியம் என்ற தாது மறுசுழற்சிக்காக சேர்த்து வைக்கப்படுவதையும், கடலில் இருந்து எடுக்கப்படும் நீரால் அணு குளிர்வித்து 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் மீண்டும் கடலுக்குள் செலுத்துவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தன்னிச்சையாக நிறுத்தப்படும் செயலி, அணுஉலையில் பொறுத்தப்பட்டுள்ளதையும் மாணவர்களுக்கு காண்பித்தனர்.

Tags : VSR ,Kudankulam Nuclear Power Station ,School ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...