×

பனையூர் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

குளத்தூர்,பிப்.7: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துராஜ் தலைமையில் கொரானா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மரிய அனிதா முன்னிலை வகித்தார். தொடர்ந்து கொரானா வைரஸ் உருவாகுதல், அறிகுறிகள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் மாணவர்களிடையே கலந்துரையாடினர். சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் தன்சுத்தம், உடல்நலம் பேணுதல், சுகாதாரவாழ்வு, சத்தான உணவுகள் குறித்து பேசினார். கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம் தங்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறித்து மாணவிகள் சிவதர்ஷினி, முருகப்பிரியா, அனிதா ஆகியோர் பேசினர். ஆசிரியர் அற்புதசகாயராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Awareness Camp ,Panayur School ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்