×

வைகுண்டம் அருகே ரயில் மோதி வாலிபர் பலி

செய்துங்கநல்லூர், பிப்.7: வைகுண்டம் அருகே உள்ள வீரளபேரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருநெல்வேலி ரயில்வே போலீஸ் மற்றும் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகு ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து கிடந்த நபர் ஊதா கலரில் லுங்கி மற்றும் சட்டை அணிந்துள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் யார்? ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vaikuntam ,
× RELATED மெட்ரோ ரயிலில் கட்டண சலுகை