×

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவில்பட்டி, பிப்.7: கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.   கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் தலைமையிலான போலீசார், கோவில்பட்டி அண்ணா பேரூந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோவில்பட்டி ராம்நகரை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன் (42), இளையரசனேந்தலை சேர்ந்த இருளாண்டி மகன் கண்ணன் (45), நாலாட்டின்புதூர் மொட்டைமலையை சேர்ந்த சுப்பையா மகன் வேலுச்சாமி (46), புதுகிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் சங்கரன் (55), சீனிவாசநகரை சேர்ந்த செல்லையா மகன் முத்துகுமார் (44), கோவில்பட்டியை சேர்ந்த செல்லத்துரை மகன் விஜயபாண்டி (23) ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kovilpatti ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு:...