×

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா

பூதப்பாண்டி, பிப்.7: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் வருடம் தோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான தைப் பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தினமும் இரவு பட்டிமன்றம், சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், இரவு சுவாமியும் அம்பாளும் வாகனத்தில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.

விழாவின் 9ம் நாளான இன்று காலை 9 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா துவங்குகிறது. ஏராளம் பக்தர்கள் திருத்தேரை வடம் தொட்டு இழுப்பார்கள். பகல் 1 மணிக்கு அன்னதானம் இரவு 9 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சப்தா வர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.10ம் திருவிழாவான நாளை இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் செல்வகுமார், பொது செயலாளர் பாண்டியன், பொருளாளர்கள் வேலப்பன், சண்முகம், கெளரவ தலைவர் அருணாசலம்பிள்ளை மற்றும் கோயில் நிர்வாகத்தினரும் செய்து வருகிறார்கள்.


Tags : Chariot Festival ,Poothapandi Boodalingaswamy Temple ,
× RELATED ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை,...