×

வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கும்பல் சிக்கியது

புதுச்சேரி, பிப். 7: புதுச்சேரி, மேட்டுப்பாளையம், ராம் நகரை சேர்ந்தவர் ஜெயபால் (24). பெயிண்டரான இவரை 4ம் தேதி இரவு ஒரு கும்பல் அங்குள்ள காலியிடத்துக்கு இழுத்து சென்று, சரமாரியாக வெட்டினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் அவரை 2 கிமீ தூரத்திற்கு தூக்கி சென்று, கொலை செய்து வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.இதுதொடர்பாக ஜெயபாலின் தாய் லட்சுமி அளித்த புகாரின்பேரில் ஏற்கனவே மிஸ்சிங் பிரிவில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதால் அதை கொலை வழக்காக
மாற்றியமைத்தனர். பின்னர் சீனியர் எஸ்பி அகன்சியா யாதவ் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை பணிகள் முடுக்கி விடப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், கோரிமேடு வடக்கு பாரதிபுரத்தில் வசிக்கும் தொழிலாளி பன்னீர்செல்வத்தை (22), 2019 ஏப்ரலில் ஏற்பட்ட மோதலின்போது ஜெயபால் வெட்டியதும், இதுதொடர்பாக கோரிமேடு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதில் உயிர்தப்பிய பன்னீர்செல்வம் ஜெயபாலை பழிதீர்க்க காத்துக்கொண்டிருந்தார். இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சம்பவத்தன்று தனிமையில் இருந்த ஜெயபாலை வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பன்னீர்செல்வம், பூபதி, லட்சுமணன், அய்யனார், லோகேஷ் உள்ளிட்ட 5 பேர் கும்பலை குற்றவாளிகளாக அடையாளம் கண்ட போலீசார், அவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டனர். இதற்காக 2 தனிப்படைகள் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் தீவிர தேடுதலில் இறங்கிய நிலையில் 5 பேரும் போலீஸ் பிடியில் சிக்கியதாக தெரிகிறது.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. முன்விரோதம் காரணமாக ஜெயபாலை பழிதீர்க்க காத்திருந்த பன்னீர்செல்வம் சம்பவத்தன்று அவர் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, தனது கூட்டாளிகளை வரவழைத்து சரமாரியாக வெட்டினார்.

இதில் நிலைகுலைந்து ஜெயபால் கீழே விழுந்தார். இதனிடையே தன்னை ஜெயபால் தாக்கிய இடத்திலேயே, அவரை கொலை செய்ய வேண்டும் என எண்ணியிருந்த பன்னீர்செல்வம், அவரை தனது கூட்டாளியின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து தன்னை தாக்கிய இடத்திற்கு கொண்டு சென்றார். அங்கு சென்றதும் ஜெயபாலை மீண்டும் சரமாரியாக வெட்டி, அவர் இறந்தது உறுதியானவுடன் உடலை வீசிவிட்டு சென்றுவிட்டார். இதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்ததாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அவர்களை இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கும் நடவடிக்கை
யிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.இதனிடையே கொலை செய்யப்பட்ட ஜெயபாலின் உடல், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : gang ,murder ,plaintiff ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...