×

தலைவர் தேர்வில் முறைகேடு கண்டித்து அன்னவாசல் ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பால் பரபரப்பு

இலுப்பூர், பிப். 7: தலைவர் தேர்வில் முறைகேடு கண்டித்து அன்னவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அன்னவாசல் ஒன்றியக்குழு முதல் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு வரவேற்றார். தீர்மானங்கள் குறித்து மேலாளர் வாசிக்க துவங்கினார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் தேர்வு செய்வதில் முறைகேடு நடந்துள்ளது, இதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளதால் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து நடந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி பேசும்போது, வரும் 5 ஆண்டுகளில் கட்சி பாகுபாடின்றி ஒவ்வொரு உறுப்பினர்களில் பகுதியில் உள்ள பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து பாரபட்சமின்றி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
இதுகுறித்து வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள் ராசப்பன், கண்ணதாசன் கூறும்போது, ஒன்றியக்குழு தலைவர் தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் எங்களின் அதிர்ப்தியை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்தோம்.ஓன்றியக்குழு தலைவர் குழு தேர்தலின்போது ஓட்டு போட விடாமல் கடத்தப்பட்டதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயம் என்பவர் அதிமுக உறுப்பினர் ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் வரிசையில் உட்கார்ந்திருந்தார்.

Tags : DMK ,Annawasal ,union committee meeting ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்