×

சொட்டுநீர் பாசனம் மூலம் முலாம்பழம் சாகுபடி

கள்ளக்குறிச்சி, பிப். 7:    கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரி சொட்டுநீர் பாசனத் திட்டம் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவரி நில மேம்பாட்டு திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம், முதல்வரின் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம், வீரிய ரக காய்கறி விதைகள் வழங்குதல், கத்திரி, மிளகாய், வெண்டை, தர்பூசணி, பாகல், புடலை, மா, வாழை, மஞ்சள், சம்பங்கி, மல்லி, கோலியஸ் ஆகிய பயிர்களுக்கு மானியத் திட்டங்களும் வழங்குவது உள்ளிட்ட திட்ட செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.  அதன் வளர்ச்சி குறித்து ஏமப்பேர் கிராம எல்லை பகுதியில் விவசாயி கிருஷ்ணமூர்த்தி மகன் அசோக்குமார் என்பவரது 5 ஏக்கர் விவசாய நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் முலாம்பழம் சாகுபடி செய்துள்ளார்.

அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளிடம் சொட்டுநீர் பாசனத்தை கையாளும் முறை குறித்தும் கேட்டறிந்தார். நிலப்போர்வை அமைத்த வயல்கள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பலன்கள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் வாமலை, முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கோவிந்தராஜ், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் சக்திவேல், தனசேகரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.   

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை