×

வி.அகரம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம், பிப். 7: விழுப்புரம்  மாவட்டத்தில் நீர், நிலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறது.  குறிப்பாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, வரத்து  வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே  விழுப்புரம் அருகே உள்ள வி.அகரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 120  ஏக்கர் பரப் பளவில் ஏரி உள்ளது. மழைக் காலங்களில் சேமிக்கப்படும்  தண்ணீர்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர்தட்டுப்பாட்டை  போக்கவும், வறட்சி காலங்களில் விவசாய பாசனத்திற்கும் உதவியாக இருந்தது. காலப்போக்கில்  படிப்படியாக பலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவந்தனர். இதனால் சுமார் 40  ஏக்கர் பரப்பளவில் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மழைக்காலங்களில்  தண்ணீரை சேமிக்கமுடியாத நிலை உருவாகின. இதனிடையே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி  தண்ணீரை சேமிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகள் தொடர்ந்து மனு  அளித்துவந்தனர்.  அதன்படி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர்  உத்தரவின்பேரில் உதவி பொறியாளர்கள் அன்பரசன், ஞானசேகரன் மற்றும் ஊழியர்கள்  ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு
களை அகற்றும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு,  ஏரியை சுற்றிலும் கரைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags : V.Akaram Lake ,
× RELATED மருத்துவ, அபாயகரமான கழிவு அகற்றும்...