×

7 ஊராட்சிக்கு குப்பை அள்ளும் வாகனம்

உளுந்தூர்பேட்டை,  பிப். 7: உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.சாத்தனூர்,  ஆர்.ஆர்.குப்பம், பிடாகம், எறையூர், கிளியூர், காட்டுஎடையார்,  எம்.குன்னத்தூர் உள்ளிட்ட 7 கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை  திட்டத்தின்கீழ் குப்பை அள்ளும் இலகுரக இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், சீனுவாசன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு குமரகுரு எம்எல்ஏ தலைமை தாங்கி ரூ.25 லட்சம் மதிப்பிலான  வாகனங்களை ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேலாளர்  செந்தில்முருகன், முன்னாள் துணை சேர்மன் சாயிராம், ஒன்றிய செயலாளர்  மணிராஜ், முன்னாள் செயலாளர் பழனிவேல், ராமசாமி மற்றும் நிர்வாகிகள்  குணசேகரன், சக்திவேல், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : road ,
× RELATED குப்பை கொட்டும் இடத்தில் மர்மபொருள் வெடித்தது: முதியவரின் கால் துண்டானது