×

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை

நாகை,பிப்.7: மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கோடு கடலில் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரவீன்பிநாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடல்மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் படி மீன்வளத்தினை பாதுகாக்கும் நோக்குடன் கடலில் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துதுறை, மீன்வளத்துறை ஆகிய அலுவலர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளையும் மற்றும் அதனை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் பறிமுதல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடித்த மீன்களை வாங்கும் மீன் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும் போது வலைகள் மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படும். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளைக்கொண்டு மீன்பிடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.Tags : fishermen ,
× RELATED கர்நாடகாவில் இருந்து ராமநாதபுரம்...