×

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

புவனகிரி, பிப். 7: பரங்கிப்பேட்டை அருகே உள்ளது கொத்தட்டை கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தலித்துகளுக்காக வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். அப்போது தலையிட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் புவனகிரி தாசில்தார் சத்தியன், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்டோர் கொத்தட்டை கிராமத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த இந்திரா என்பவர் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வந்த வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர். இந்நிலையில், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் சம்பவ இடத்துக்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சப்-கலெக்டர், மாற்று இடம் வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்புகளை ஒருவார காலத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும் கூறினார். இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் கலைந்து சென்றனர்.

Tags : anti-woman ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்