×

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் இந்திர பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி,பிப். 7: திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகவும், சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தியாக தனிசன்னதியில் அருள்பாலித்து வருவது கூறிப்பிடதக்கது. மேலும் நவக்கிரங்களில் ஒன்றான கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன்பகவானுக்கு தனி சன்னதியுடன் விளங்கி வருகிறார். சிவனின் முக்கண்ணிலிருந்து தோன்றி முன்று பொறிகள் இந்த கோயிலில் முக்குளங்களாக தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோயிலின் இந்திர பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றபட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன், ஊராட்சி மன்றத்தலைவர் சுகந்தி நடராஜன். துணை தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.


Tags : Indra Festival ,Thiruvenkadu Swetharanyeswarar Temple ,
× RELATED 2 ஆண்டுகளுக்கு பிறகு பேரூர்...