×

கொள்ளிடம் பகுதி விவசாயிகள் கவலை வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்

வேதாரண்யம், பிப்.7: வேதாரண்யம் கடற்ரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா முழுவதும் நேற்று கடலோர காவல்படையினர் சகார் கவாச் என்னும் ரோந்து பணியை வேதாரண்யம் கடலோர காவல்படை டிஎஸ்பி குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் மற்றும் போலீசார் மேற்கொண்டனர். கோடியக்கரையிலிருந்து புஷ்பவனம் வரை ரோந்து பணியை மேற்கொண்ட கடலோர காவல் படையினர் வேதாரண்யம் அடுத்த மணியன்தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது 5 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட டால்பின் உயிருடன் கரை ஒதுங்கியது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த மீனை கடலோர காவல் படை போலீசார் மற்றும் மீனவர்கள் மீட்டு உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர்.அறுவடை இயந்திரம் தட்டுப்பாடாக இருப்பதால் இதுவரை கொள்ளிடம் வட்டாரத்திலேயே 30 சதவீத அறுவடை மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் இன்னும் அறுவடை செய்ய வேண்டியுள்ளதாக உள்ளது.


Tags : beach ,Vedaranyam ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...