×

தனியார் மருத்துவமனையில் மூதாட்டிக்கு மாற்று கல்லீரல் பொருத்தம்

புழல், பிப். 7: செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் மொண்டியம்மன் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியை சேர்ந்த ஈஸ்வரி ஜெகதீசன் (67) என்ற  மூதாட்டி அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று பிரபல மருத்துவர் முகமது ரெலா தலைமையிலான 9 பேர் குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். இதன் மூலம் தற்போது மூதாட்டி ஈஸ்வரி பூரண நலத்துடன் இருக்கிறார். இதுகுறித்து மருத்துவர் முகமது ரெலா கூறுகையில், ‘வடசென்னை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது,  இதுவே முதல்முறை’ என்றார்.

Tags : hospital ,
× RELATED செங்கை, காஞ்சியில் இடமாற்றம் செய்த...