×

மாணவர்களின் மனதில் பதிய பள்ளி சுவர்களில் திருக்குறள் எழுத வேண்டும்

மாமல்லபுரம், பிப்.7: மாணவர்களின் மனதில் பதிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் சுவர்களில் திருக்குறள் எழுத வேண்டும் என கல்வித்துறைக்கு சமூக ஆர்வலர்கள் விலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு தொடக்கப், நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என ஏராளமானவை உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழ் வழியில் கல்வி பயில்கின்றனர்.தற்போதைய சூழலில் பாடப்புத்தகத்தில் திருக்குறளை மாணவர்கள் படித்து வந்தாலும், போதிய அளவு மாணவர்களுக்கு திறக்குறள் பற்றிய முழுமையான கருத்தும், தெளிவும் இல்லை. செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றின் மூலம் வரும் தகவல்களை பற்றி மனப்பாடமாகவும், அர்த்தத்தையும் தெளிவாக தெரிந்து கொள்கின்றனர். இவர்களுக்கு திருக்குறளின் மீது ஆர்வமோ, அர்த்தமோ தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய சூழலில், பள்ளி சுவர்கள், போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறியுள்ளன. பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் மனதில் தடம் பதிக்க மேற்கண்ட பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றில் திருக்குறளை எழுதலாம். மாணவர்களின் கண்களில் படும்படி திருக்குறள் எழுதினால் சுலபமாக அவர்கள் மனதில் பதியும். மேலும், காலை வழிபாட்டு நேரத்தில் திருக்குறள் சொல்வதால், மாணவர்களின் மனதில் பதியும். இதற்கு மாவட்ட கல்வித் துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் திருக்குறளை தெரிந்து வைத்திருக்கும் மாணவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். காரணம் பாடப்புத்தகத்தில்  மட்டுமே திருக்குறள் இடம் பெற்றுள்ளது. பள்ளி சுற்றுச்சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள், நிழற்குடைகள் ஆகியவற்றில் திருக்குறளை எதிழுனால் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட கல்வித்துறை அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : school ,
× RELATED கீழடி 6ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவர்கள்கண்டுபிடிப்பு