×

கல்லூரி மாணவியின் படம் மாபிங் பள்ளி மாணவன் கைது

காஞ்சிபுரம், பிப்.7: காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராயன்குட்டை பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கிறார்.இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். இதில் உள்ள கல்லூரி மாணவியின் படத்தை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாதேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பள்ளி மாணவன் பதிவிறக்கம் செய்து, அந்த மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். மேலும், அந்த படத்தை, அதே மாணவியின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை அமைத்து விசாரித்தனா்.அதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாதேஷ் என்ற பள்ளி மாணவன் என தெரிந்தது. இதையடுத்து, மாணவனை பிடித்த தனிப்படை போலீசார், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு இளஞ்சிறார் சிறப்பு இல்லத்தில் அடைத்தனர்.

மேலும், பெண்கள் மற்றும் மாணவிகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள்மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என காஞ்சி எஸ்பி சாமுண்டீஸ்வரி எச்சரித்துள்ளார்.குன்றத்தூர்: குன்றத்தூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் நந்தினி(16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை வெளியே சென்ற நந்தினி மீண்டும் வீடு திரும்பினார். பின்னர் அவர், தனது அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் நந்தினி வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அறையின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நந்தினி தூக்குப்போட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

புகாரின்படி குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மேனல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (40). சென்னை மாநக போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று பணி முடித்துவிட்டு ஞானசேகரன், உத்திரமேரூரில் இருந்து தனது பைக்கில் மேனல்லூருக்கு புறப்பட்டார்.சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்ற வேன், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானசேகரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாின்படி உத்திரமேரூர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : college student ,mapping school ,
× RELATED கூடுவாஞ்சேரி அருகே 2 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவன் கைது