உத்திரமேரூரில் மாற்றுத் திறனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

உத்திரமேரூர், பிப்.7: உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மனித வளையப் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலாஜி, ஜான்சன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாற்றுதிறனாளிகள் அனைவரும் வளைய வடிவில் அமர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவி உபகரணங்களை உடனே வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 100 நாள் சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் பாக்கி தொகையை உடனே வழங்க  வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிகளில் வழங்கப்படும் கடனை நிபந்தனையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தனியார் துறையிலும் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>