×

கடலோர பாதுகாப்பு ஒத்திகை பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைந்த 23 பேர் கைது: போலீசார் விசாரணை

சென்னை: சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகையின் போது பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைய முயன்ற 23 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலோர பாதுகாப்பு படை மற்றும் சென்னை காவல்துறையினர் இணைந்து ஆபரேசன் சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை தமிழகத்தில் நேற்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து இப்பாதுகாப்பு ஒத்திகையினை நடத்தி வருகிறார்கள்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்கு சென்னை காவல் ஆணையர் விரிவான அறிவுரைகளை வழங்கி ஒத்திகையினை மேற்பார்வையிட்டு வருகிறார். மேலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், உயர்மட்ட பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோர பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று காலை சென்னையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது சென்னை நகருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேரையும், தூத்துக்குடியில் 12 பேர், நாகப்பட்டினத்தில் 7 பேர் என மொத்தம் 23 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Tags : Coast Guard ,
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...