×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம்: பார்வையாளர்கள் கண்டுகளிப்பு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்று கண்டுகளித்து வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை சார்பில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியது. பூங்கா வனச்சரக அலுவலர் கோபக்குமார் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் சகினா இசபல், பூங்கா மருத்துவர் ஸ்ரீதர், பயிற்றுனர் சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பூங்கா துணை இயக்குநர் கலந்துகொண்டு, புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது, பூங்காவில் உள்ள ரோகினி (6), பிரக்குருதி (4) ஆகிய இரண்டு யானைகளுக்கு கரும்பு, வாழைப்பழம், கம்பு சாதம், ராகி, சத்துள்ள லேகியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து உணவு வகைகளை ஊழியர்கள் வழங்கினர். இதனை குழந்தைகள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இந்த முகாம் அடுத்த மாதம் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பார்வையாளர்களுக்கு பூங்கா பயிற்றுனர் சங்கரி விளக்கி கூறினார். மேலும், ஆனைமலையிலிருந்து ரோகினி என்ற யானையும், முதுமலையிலிருந்து பிரக்குருதி என்ற யானையும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இதில், தற்போது பூங்காவில் இரண்டு யானைகள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Elephants Refreshment Camp ,Visitors ,Vandalur Zoo ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி 19ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை