×

நம்பெருமாள் நெல் அளவை கண்டருளினார் திருச்சி ஜி.ஹெச்சில் சிகிச்சை மாநகராட்சிக்கு ரூ.39.70 லட்சம் வாடகை பாக்கி மத்திய பஸ் நிலையத்தில் இயங்கிய கடைக்கு சீல்

திருச்சி, பிப்.6: மாநகராட்சிக்கு ரூ.39.70 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தாததால் மத்திய பஸ் நிலையத்தில் இயங்கிய கடைக்கு சீல் வைத்து கையகப்படுத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி ெபான்மலை கோட்டத்திற்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தெற்கு பகுதி கட்டிடத்தின் அபிராமி ஓட்டல் எதிர்புறம் உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த ஏ1 குரூப் பார்ம் என்ற பெயரில் உள்ள கடை குத்தகைக்கு மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கடை நேற்று வரை உள்ள காலத்திற்கு நிலுவை மாத வாடகை ரூ.39.70 லட்சம் செலுத்த கோரி நேரிலும், தொடர் நினைவூட்டு அறிவிப்புகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதில் பெற்றுக்கொண்டு இதுநாள் வரை எந்தவித முகாந்திரமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே நேற்று ஏ1 குரூப் பார்ம் கடையை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகத்தால் கையப்படுத்தப்பட்டது.

Tags : treatment center ,shop ,Central Bus Station ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்