×

காவேரி காரேஜ்(பி)லிமிடெட்டில் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் அல்ட்ரோஸ் கார் அறிமுகம்

திருச்சி, பிப்.5: பாதுகாப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் இயக்க அனுபவத்தில் அதன் தங்க தரத்தின் மூலம் இப்பிரிவை மறுவரையறை செய்கிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் ஜின்சிஏபி 5 நட்சத்திர தரநிலை கொண்ட அல்ட்ராஸ் இதன் 4 வகையினத்தில் இந்தியாவின் மிக பாதுகாப்பான கார் நுழைகிறது. ஆட்டோமொபைல் தொழிற்துறையின் முதல் முழுமையான பிஎஸ்வி 1 தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் பெறுகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ..5.29 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. இக்காரை திருச்சி காவேரி காரேஜ் பிரைவேட் லிமிடெட்டில் குரு ஹோட்டல் நிறுவனர் ஜி.ஆர்., தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அஜந்தா ஓட்டல் நிறுவனர் வேணுகோபால், அறம் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் ராஜா, காவேரி குரூப்ஸ் நிறுவனர் மணிவண்ணன், காவேரி மேனேஜிங் டைரக்டர் இளங்கோ, ஏரியா விற்பனை மேலாளர் திலீப்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் விவரங்களுக்கு காவேரி டாடா 70944 66666 அணுகலாம்.

Tags : Kaveri Garage ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ