×

திருச்சி ஜங்ஷன் ஆர்எம்எஸ்சில் திருச்சியில் நாளை

திருச்சி, பிப்.6: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயூவைச் சேர்ந்த ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சார்பில் கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் அருகிலுள்ள ஆர்எம்எஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட உதவி செயலாளர் சரவணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதன்மை மேலாளருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் ேபாராட்டம் நடத்தப்பட்டது. இதில் டிக்கெட் பரிசோதகர்களை செக்குமாடு ரோஸ்டரில் போட்டு வதைக்கும் கமர்சியல் நிர்வாகம் பழைய சிசிஎம் முறையை அமல்படுத்த வேண்டும். இது வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி பிஜி1 படுக்கை வசதிகள் ரயில்களில் 58 மணி நேரம் பணிபுரிய வேண்டியுள்ளது. பிஜி2 படுக்கை ரயில்களில் 6 இரவு தொடர்ந்து வேலை பார்க்க வேண்டி உள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மன உளைச்சலில் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் எங்களுக்கு பழைய சிசிஎம் ரோஸ்டர் அமல்படுத்திட வேண்டிக்கொள்கிறோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர். இதில் கோட்ட செயலாளர் கண்ணன், உதவி செயலாளர் சுப்பிரமணியன், உதவி தலைவர் ஜாய்சார்லஸ், திருச்சி டிக்கெட் பரிசோதகர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

டேபிள் டென்னிஸ் போட்டி: ஹெச்ஏபிபி அணி முதலிடம்திருவெறும்பூர், பிப்.6: திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலையான ஹெச்ஏபிபியில் மத்திய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கு இடையே நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் திருச்சி ஹெச்ஏபிபி அணி ஓப்பன் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோர் போட்டியில் வெற்றி பெற்று திருச்சிக்கு பெருமை சேர்த்தது. திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹெச்ஏபிபியில் மத்திய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கு இடையான மூன்று நாள் டேபிள் டென்னிஸ் போட்டி கடந்த 3ம் தேதி தொடங்கி நேற்றோடு நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மத்திய பாதுகாப்பு படைகள தொழிற்சாலையை சேர்ந்த 11 கம்பெனிகளை சேர்ந்த 54 வீரர்கள் கலந்துகொண்டனர். டேபிள் டென்னிஸ் போட்டியானது ஒப்பன், தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடந்தது. இதில் தனிநபரில் ஆவடியை சேர்ந்த வெற்றிவேல் முதல் இடத்தையும், சோலையன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

இரட்டையர் பிரிவில் திருச்சியை சேர்ந்த அன்பரசு, ராஜேந்திரன் முதலிடத்தையும் ஆவடியை சேர்ந்த வெற்றிவேல் சோலையன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். அதேபோல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தனிநபர் பிரிவு போட்டியில் திருச்சி ஹெச்ஏபிபியை சேர்ந்த சகாயராஜன் முதலிடத்தையும் கார்த்திகேயன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் திருச்சி ஹெச்ஏபிபி யை சேர்ந்த மோகனகிருஷ்ணன், கார்த்திகேயனும் முதலிடத்தை பெற்றனர். திருச்சி சகாயராஜ், ஆவடி ராஜ்குமார் அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். அவர்களுக்கு ஹெச்ஏபிபி பொது மேலாளர் யாதவேந்ரா சோப்ரா சான்றிதழ்களையும், கோப்பையையும், பரிசுகளையும் வழங்கினார். ஓப்பன் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு நடந்த போட்டிகளில் ஹெச்ஏபிபி வீரர்கள் வெற்றிப் பெற்று திருச்சிக்கு பெருமை சேர்த்தனர். விழாவில் ஹெச்ஏபிபி அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Tags : Trichy Junction RMS ,
× RELATED கோடைகாலம் என்பதால் குடிநீரை...