×

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்க ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து பயன்பெறலாம்

வலங்கைமான்,பிப்.6: விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைத்திடவும், பொருளாதாரத்தை உயர்த்திடவும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து பயன்பெற வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவிரி டெல்டா மக்களின் முக்கிய தொழில் விவசாயம் பருவமழை காலத்தில் மழை நன்றாக பெய்தாலும் வெயில் காலத்தில் அதிக வெயில் காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. ஆற்றிலும் நீர் வரத்து குறைவாக இருக்கும். எனவே சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ஆண்டு முழுவதும் விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடிவதில்லை, இதனால் விவசாயிகளின் வருமானம் மற்றும் பொருளாதார நிலைமை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த நிலை மாற விவசாயிகள் பயிர் சாகுபடிகள் செய்யும் போது கூடவே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது நல்லது.
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது நம் முன்னோர்கள் தொன்று தொட்டு செய்து வந்ததுதான். நாம் வீடுகளில் வளர்க்கும் நாட்டு கோழிகளை அதிக அளவில் பண்ணை குட்டைகளின் அருகில் வளர்க்கலாம். வெட்டிய பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பையும் சேர்த்து செய்யலாம். இதுமட்டு மல்லாமல் கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளலாம். இதனால் நீர்ப்பரப்பும் நிலப்பரப்பும் முழுமையாக பயன்படுத்தப்படுவதுடன், விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும் பொருளாதாரமும் உயரும் என அவர்அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers' Association ,farm ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு