×

விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு தியாகராஜ சுவாமி கோயிலில் புதிய ெகாடிமரத்திற்கு கும்பாபிஷேகம்

திருவாரூர், பிப். 6: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கொடி மரத்திற்கான கும்பாபிஷேக விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலான தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி இந்த விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி கோயிலின் மூலவரான வன்மீக நாதர் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் இருந்து வரும் இக்கொடி மரமானது கடந்த 1928ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையில் அதன் பின்னர் தற்போது 92ஆண்டு காலம் ஆகிவிட்டதால் சற்று சேதம் அடைந்திருந்தது.

இதனையடுத்து இந்த கொடிமரத்தினை புதிதாக மாற்றுவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக முடிவு செய்யப்பட்டதையடுத்து கடந்த மாதம் இந்த கொடிமரம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கான புதிய கொடிமரம் கேரள மாநிலத்திலிருந்து ரூ 9 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு மேற்படி கோயிலுக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டதையடுத்து 54 அடி நீளம் கொண்ட இந்த கொடி மரமானது கடந்த மாதம் 20ம்தேதி சிவாச்சாரியார்கள் மூலம் பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இந்த கொடிமரத்திற்கான கும்பாபிஷேமானது நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 3ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை வரையில் 3கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் 4ம் கால பூஜைகள் துவங்கப்பட்டு 9 மணியளவில் மஹா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று பின்னர் 10 மணியளவில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் முலம் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜரை வழிபட்டனர்.

Tags : Agriculture Officer ,
× RELATED கொரோனாவை விரட்ட மோடியின் அழைப்பை ஏற்று வடஇந்தியாவில் ஒளியேற்றம்