×

திமுக எம்எல்ஏ வலியுறுத்தல் திருவாரூரிலிருந்து 4 புதிய பேருந்துகள்

திருவாரூர், பிப்.6: திருவாரூரிலிருந்து ரூ.1கோடி மதிப்பில் 4 புதிய பேருந்துகளை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்துகள் இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. இதில் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்து கலெக்டர் ஆனந்த் பேசுகையில், அரசு போக்குவரத்து கழகத்தின் நாகை மண்டலத்திற்கு என தமிழக அரசு மூலம் கடந்த 2018- 19 நிதி ஆண்டிற்கு 149 புதிய பேருந்துகள் ஓதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டத்திற்கு என 43 பேருந்துகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 4 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவைகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி திருத்துறைப்பூண்டியில் இருந்து திருப்பூருக்கு ஒரு பேருந்து,திருவாரூரில் இருந்து பழனிக்கு ஒன்று,மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு ஒன்று மற்றும் நன்னிலத்தில் இருந்து திருச்சிக்கு ஒன்று என இந்த 4 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் இதன் மொத்த மதிப்பு என்பது ரூ ஒரு கோடி ஆகும். இதில் 52 பயணிகள் இருக்கை வசதி மற்றும் அவசர வழிப்பாதை, தீயணைப்பு சாதனம் உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே இதனை பயணிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ ஜெயப்பிரிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், போக்குவரத்து கழக பொது மேலாளர் மாரியப்பன், வணிக துணை மேலாளர் ராஜா, கோட்ட மேலாளர் சிதம்பர குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,MLA ,Thiruvarur ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா