×

கலெக்டர் துவக்கி வைத்தார் மன்னார்குடி கேகேநகர் பிரதான வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்

மன்னார்குடி, பிப்.6: மன்னார்குடி காளவாய்க்கரை பகுதி அருகில் உள்ள கலைஞர் கருணாநிதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் பட்டம்மாள், செய லாளர் ராமகிருஷ்னன், பொருளாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் (பொ ) திருமலைவாசனை நேரில் சந்தித்து தங்கள் பகுதியில் உள்ள வாய்க்கால் மற்றும் நீர் வழி பாதைகளில் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், கலைஞர் கருணாநிதி நகரின் தலைப்பில் 36 அடி அகலமுள்ள வாய்க்கால் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் மன்னார் குடி நகரத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கு நீர் கொண்டு செல்லவும், மழைக் காலங்களில் காளவாய்க்கரையின் மேற்கு பகுதியில் உருவாகும் உபரிநீர் மற்றும் ஆணைவிழுந்தான் குளம், அண்ணாமலைநாதர் குளம், பெத்தபெருமாள் குளம், முருகன்கோயில் குளம் உள்ளிட்ட இடங்களில் நிரம்பி வழியும் வெள்ள நீரை நடிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த வாய்க்காலை கேகே நகரில் தனியார் சிலர் வாய்க்காலின் பாதையை தூர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வெள்ள கால ங்களில் கேகே நகர் மற்றும் ஜெகதாம்பாள் நகரில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.கடந்த ஆண்டுகளில் மழைக்காலத்தில் வாய்க்கால் தூர்வாரப்படாமல் அடை ப்பு ஏற்பட்டபோது பெருமழையால் நகர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி பெரும் துன்பத்திற்கு ஆளானோம். எனவே கேகே நகர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி அதன் தலைப்பிலிருந்து இறுதி வரை முழுமையாக தூர்வார நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Collector ,mouthpiece ,Mannargudi Kekunagar ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...