×

மாணவர்கள், டிரைவர்கள் காயம் வெள்ளி மலர் வெள்ளிதோறும் படியுங்கள் 13 ஏக்கர் பரப்பளவு ஏரியை காணவில்லை

பெரம்பலூர்,பிப்.6:பெரம்பலூர் அருகே, வரகூரில் காணாமல் போன ஏரியை கண்டுபிடித்துத் தரக்கோரி கலெக்டரிடம் அக்கிராமப் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன் னம் தாலுக்கா, வரகூர் கிரா மத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் உப்புக்குளம் என்கிற உப்பேரி உள்ளது.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந் த ஏரி நீர்தான் அந்தக் கிரா ம மக்களுக்கு குடிநீராகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் தான் அக்கிராமத்தில் உள்ள கிணறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அதனைக் கொண்டு விவசாய வயல் பாசன வசதி பெறும். போர்வெல்,சிறு குளம் ஆகியவ ற்றில் நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் பஞ்சம் என்பதே ஏற்பட்டதில்லையாம்.

இந்த ஏரி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருகின்றனர். மேலும் சிலர் வீடுகளை கட்டியுள்ளனர். இதனால் தற்போது சுமார் ஒன்றரை ஏக் கர் நிலம் மட்டுமே ஏரியாக உள்ளது. இதிலும் கருவேலி மரங்கள் அடந்து வளர்ந்தும், நீர்வரத்து வாய்க்கால் புதர் மண்டியும், தூர்வராதததால் நீர்வரத்து இல்லாமல் ஏரி வறண்டு கிடந்தது. இதனால் கிராமத்தில் தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அக்கிராம பொதுமக்கள் வெளிநாட்டில் தொழில்செய்யும் நண் பர்கள் மூலம் நிதி திரட்டி இந்த ஒன்றரை ஏக்கர் மட்டுமே கொண்ட ஏரியை ஆழப்படுத்தியும், நீர்வரத்து வாய்க்காலைத் தூர் வாரிப்பட்டது. இதன் காரணமாக மழை பெய்தபோது நீர்வரத்து அதிகரித்து ஏரி பாதியளவு நிரம்பியது. இதனால் இக்கிராமத்தில் உள்ள கிணறு, போர்வெல் போன்றவற்றில் தண்ணீர் வசதி ஏற்பட்டது.

இந்நிலையில் கிராம ஊராட்சி சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் கிடங்குகட்ட அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், அந்த கட்டிடத்தை ஏரிப் பகுதியில் கட்ட முடிவு செய்து,கடந்தவாரம் வட்டாரவளர்ச்சித்துறை அதிகாரிகள் நில அளவீடு செய்து சென்றுள்ளனர். இந்த கட்டிடமும் கட்டிவிட்டால் ஏரி என்பதே இல்லாத நிலைதான் ஏற்படும். இதனா ல் கிராமமக்களின் அடிப்ப டைத் தேவையான நீர்ஆதா ரம் கேள்விகுறியாகியுள் ளது. ஏரியின் நிலத்தைப் பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்துள்ள நிலையில், அரசே மீதமுள்ள ஏரியின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதால், ஏரி என்பது காணாமல் போய்விடும். இப்படி அரசே ஏரியை ஆக்கிரமிக்க துவங்குவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. எனவே காணாமல் போய் உள்ள உப்பேரியை கண்டு பிடித்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அக ற்றியும், அரசுக் கட்டிடம் கட் டாமல் வேறு இடத்தில் கட் டிடம் கட்டியும், ஏரியை மீட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மக் களின் நீராதாரத் தேவையைப் பூர்த்தி செய்யவேண் டும் என அக்கிராமப் பொது மக்கள் கலெக்டர் சாந்தாவிடம் அளித்தப் புகார் மனுவில் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.

கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மக்கள் புகார்
அடையாள அட்டை....
வேப்பந்தட்டையில் நேற்று நடந்த ஒன்றியக்குழு கூட் டத்தில், அனைத்து ஒன்றி ய  கவுன்சிலர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தமிழக அரசு முத்திரையுடன் அமை த்துத் தரவேண்டும் என  கவுன்சிலர்கள்சார்பாக வே ண்டுகோள் விடுக்கப்பட் டது. அதற்கு, அடையாள அட்டை விரைவில் ஏற்பாடு செய்து தரப்படும் என ஒன்றிய ஆணையர் இமயவரம்பன் பதிலளித்தார். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் பாரி,  ஓவர்சியர் மணிவண்ணன், மேலாளர் சட்டநாதன் மற்றும் அனை த்து கவுன்சிலர்கள்,  அலுவ லர்கள் கலந்துகொண்ட னர். முடிவில் அன்னமங்க லம் ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் நன்றி தெரி வித்தார்.

Tags : lake ,
× RELATED சென்னை அருகே பரிதாபம்: ஏரியில் மூழ்கி 3 மாணவிகள் பலி