×

மாவட்ட அளவிலான பயிற்றுநர்களுக்கு சமூக நலத்துறை சார்பில் 2 நாள் பயிற்சி துவக்கம்

பெரம்பலூர்,பிப்.6:பெரம்ப லூரில் சமூக நலத்துறை சார்பாக நடந்த 2நாள் பயி ற்சி.மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவருமான கருணா நிதி தொடங்கிவைத்தார். பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந் தைகளுக்கு கற்பிப்போம் என்றத் தலைப்பில் மாவட்ட அளவிலான பயிற்றுநர்க ளுக்கான 2 நாள் பயிற்சி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட ஊராட்சி அலுவலகக் கூட்ட மன்றத் தில் நேற்று தொடங்கியது.பெரம்பலூர் மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவருமான கருணாநிதி தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

பெரம்பலூர் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி கலந்துகொ ண்டு, குழந்தைகள் பாது காப்பு மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்ற தலைப்பில் விளக்கிப் பேசினார். திருச்சி, குழந்தைகள் மீதான வன் முறைக்கு எதிரான கூட்டமை ப்பின் மண்டல ஒருங்கி ணைப்பாளரான பிரபு கலந்து கொண்டு, குழந்தை உரிமைகள் மற்றும் குழந் தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.மாவட்ட சமூக நல அலுவல கப் பாதுகாப்பு அலுவலர் முத்துச்செல்வி கலந்துகொ ண்டு, குடும்ப வன்முறை யிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் என்றத் தலைப்பில் பேசினார்.

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நிர் வாக அலுவலர் வெள்ளைச் சாமி, மகிளா சக்தி கேந்தி ரா திட்டத்தைச் சேர்ந்த பார த் ஆகியோர் ஏற்பாடுகளை ச் செய்திருந்தனர்.பயிற்சியில் பெரம் ம்பலூர் மாவட்ட அரசு அலு வலகங்களில், வட்டாரங்க ளில் பணிபுரியும் அலுவலர்கள் மொத்தம் 60பேர் கல ந்து கொண்டனர். முன்னதாக மகிளா சக்தி கேந்திரா திட்டமகளிர் நல அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். முடிவில் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் சுகன்யா நன்றி தெரிவித்தார்.

Tags : district level trainees ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது