×

மயிலாடுதுறை நகரில் வடிகாலில் மண், குப்பைகள் உடனே அகற்றம்

மயிலாடுதுறை,பிப்.6: மயிலாடுதுறை நகரில் வடிகாலில் மண், குப்பைகளை தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனே அகற்றினர். மயிலாடுதுறை நகரில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கரூர் வைஸ்யா வங்கி சாலையில் மழைநீர் வடிகாலில் உள்ள மண் மற்றும் குப்பைகளை வெளியேற்றி கடை வாசலிலேயே போட்டிருந்தனர். அவற்றை அகற்றவில்லை, இதனால் அப்பகுதியில் வாகனம் நிறுத்துவோரும் கடைகாரர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர், இதுகுறித்து கடந்த 3ம் தேதி அன்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. 3ம் தேதி அன்று மாலையே நகராட்சி சுகாதார அதிகாரிகள் சகிதமாக சென்று அப்பகுதியை சுத்தம் செய்தனர்.

அதே போன்று மயிலாடுதுறை புதிய பேருந்து நிறுத்த்திற்கு பின்புறம் உள்ள இரண்டு வணிக வளாகங்களுக்கு முன்பாக உள்ள காலி இடத்தில் நகராட்சி குப்பைகளை தொடர்ந்து கொட்டியதால் சுகாதாரகேடு ஏற்பட்டது, அப்பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு வருவோர் பெரிதும் தொல்லைக்கு ஆளாகினர், இதுகுறித்த செய்திய கடந்த 4ம் தேதி அன்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் அண்ணாமலை மற்றும் சுகாதார அதிகாரிகள் உத்தரவின்பேரில் அந்தக்குப்பைகள் அகற்றப்பட்டது, மேலும் அப்பகுதியில் குப்பைகளைத் தரம்பிரித்து எடுத்து செல்வதற்காக இதுபோன்ற கொட்டப்பட்டதாக தெரிவித்தனர். இரண்டு பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டதற்காக நகராட்சி அதிகாரிகளையும், தினகரன் நாளிதழையும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி