×

நடவடிக்கையை துரிதப்படுத்த கோரிக்கை கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கருணாநிதி படம் வைக்காததால் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கரூர், பிப்.6: ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் தங்கராஜ், ஆணையர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்ட அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் வைக்கப்பட்டிருந்தது. தலைவர் மேசை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டிருந்தது. திமுக உறுப்பினர்கள் கணபதி, வசந்தி ஆகியோர் முன்னாள் முதல்வர் படம் வைக்கப்பட்டிருப்பதைப்போல முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தையும் வைக்கவேண்டும் என்றனர். அதற்கு தலைவர் பாலமுருகன், நீங்கள் வெற்றிபெற்று வந்து அவர் படத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்றார். முன்னாள் முதல்வர் படம் வைக்காததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் ஒன்றியத்தில் மொத்தம் 13உறுப்பினர்கள். இதில் அதிமுக 9, திமுக 2, பாமக 1, சுயேச்சை 1 ஆவர்.

Tags : councilors ,DMRC ,Karunanidhi ,panchayat union meeting ,Karur ,
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது