×

பயணிகள் வலியுறுத்தல் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொய்த்ததால் அமராவதி அணைக்கு நீரின் வரத்து குறைவு

கரூர், பிப்.6: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் அமராவதி அணை உள்ளது. கடந்த அக்டோபர் 20ம்தேதி முதல் முறை வைத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்தாலும், கரூர் மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களுக்கு சென்றடைவதற்கு முன்னரே ஒவ்வொருமுறையும் தண்ணீர் நின்று விடுகிறது. நவம்பர் 28ம்தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டும் கரூர் மாவட்டத்திற்கு வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

கேரள மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்தால்தான் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அப்படியே அணை திறக்கப்பட்டாலும் கரூர் மாவட்டத்திற்கு உரிய நீரை தருவதில்லை. இதனால் சாகுபடி பணிகளை துவங்கிய விவசாயிகள் தண்ணீரை எதிர்பார்த்து ஏமாந்தனர். அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி. அணையில் 24.51 அடிநீர் தான் உள்ளது. 300 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Travelers ,rainfall ,catchment area ,Amaravati Dam ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...