×

அமராவதி ஆற்றில் மணல் திருட்டு ஜரூர் அதிகாரிகள் மெத்தனம்

கரூர்,பிப்.6: அனுமதியின்றி ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். கரூர் அமராவதி ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கரூர் பெரியாண்டாங்கோயில் தடுப்பணை அருகே இரவு நேரங்களில் ஆற்றுமணலை அள்ளி சலிப்புசல்லடை மூலமாக சலித்து மாட்டு வண்டிகளில் கொண்டு செல்கின்றனர். அதிகாரிகள் கண்டும் காணாமல் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் இருசக்கர வாகனங்களிலும் மணல் மூட்டைகளை திருட்டுத்தனமாக கொண்டு செல்கின்றனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் அவ்வப்போது மழைபெய்தும். அமராவதி அணையில் இருந்து வரும் நீரின் காரணமாகவும் நிலத்தடி நீர் ஓரளவுக்கு பாதுகாக்கப்படுகிறது. இதுபோன்று தொடர்ந்து மணல் அள்ளினால் கோடைகாலத்தில் கடும் குடிநீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும். முன்தடுப்பு முறையாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Juror officials ,Amaravati river ,
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு...