பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

நாமக்கல், பிப்.6: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் துவங்கியது. இந்த தேர்வுகள் வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்று இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற்றது. அரசு பள்ளிகளுக்கு தேர்வு நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்களும், தனியார் பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களும் சென்று தேர்வினை நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று நேரில் சென்று தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டார்.

Related Stories:

>