×

போச்சம்பள்ளியில் சாமந்தி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை


போச்சம்பள்ளி, பிப்.6: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா,மல்லி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது. அறுவடை செய்யப்பட்ட சாமந்தியை, விவசாயிகள்  போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் நேரடி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ சாமந்தி ₹100க்கு விற்பனையானது. நடப்பு வாரம் ₹30 முதல் ₹40 வரை விற்பனையாகிறது. இதனால், அறுவடை செய்த கூலி கூட கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Pochampally: Farmers ,
× RELATED அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை...