×

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை: தர்மபுரி அருகே பரபரப்பு

தர்மபுரி, பிப்.6: தர்மபுரி அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால், பணி நிறுத்தப்பட்டது. தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி, வெண்ணாம்பட்டி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு அருகே காமராஜர் தெரு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று தனியார் செல்போன் டவர் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இத்தகவல் கிடைத்து சமூக ஆர்வலர் மார்க்ஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் கிடைத்து இலக்கியம்பட்டி ஊராட்சி செயலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தற்காலிகமாக செல்போன் கோபுரத்தை அமைக்கும் பணியை நிறுத்தப்பட்டது. அதன்பின் மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் மார்க்ஸ் கூறுகையில், ‘குடியிருப்பு நிறைந்த பகுதியில் செல்போன் டவர் அமைப்பது தவறு. இதை சுட்டி காட்டி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் இதுதொடர்பாக கலெக்டர், பிடிஓ, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தால், மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்,’ என்றார்.

Tags : Siege ,protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...