×

அதிக விபத்து நடக்கும் சாலைகளில் பிளிங்கர் லைட் பொருத்தும்பணி: எஸ்பி ராஜன் நேரில் ஆய்வு


தர்மபுரி, பிப்.6: தர்மபுரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில், அதிகமாக விபத்தும் ஏற்படும் இடங்களில், ஒளிரும் லைட் பொருத்தும்பணி தீவிரமாக நடக்கிறது. இதை எஸ்பி ராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், தொப்பூர் முதல் காரிமங்கலம் வரை (சுமார் 52 கிலோ மீட்டர் தூரம்) உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டது. கிராம சாலைகள் சந்திப்புகளில், விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டது. அதிக விபத்து நடக்கும் பகுதிகள் மற்றும் சாலை சந்திப்பு களில், விபத்தை தடுக்கும் பொருட்டு ஒளி பிளிங்கர் லைட் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. தர்மபுரி எஸ்பி ராஜன் தலைமையிலான போலீசார், மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் பிளிங்கர் லைட் பொருத்தும்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாலக்கோடு டிஎஸ்பி சீனிவாசன், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் துரைராஜ், தனிப்பிரிவு எஸ்ஐ பாரூக் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : roads ,SP Rajan ,
× RELATED செங்கல்பட்டில் வெறிச்சோடிய சாலைகள்