×

வேன் மோதி விருதுநகர் மாவட்ட விவசாயி பலி

கமுதி, பிப். 6: கமுதி அருகே வேன் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், பாறைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (60), விவசாயி. இவர் நேற்று காலை டூவீலரில் ெபட்ரோல் போட கமுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். காவடிப்பட்டி பகுதியில் வரும்போது, கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற வேன் டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செல்லமுத்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Tags : district farmer ,Wan Moti Virudhunagar ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி...