×

ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவில்லிப்புத்தூர், பிப். 6: ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடி உரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருவில்லிபுத்தூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இ.கம்யூ., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுநல அமைப்புகள், ஏராளமான முஸ்லிம்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டனர். இதனிடையே, பள்ளி குழந்தைகள் மனிதச்சங்கிலியில் பங்கேற்க வைத்தது தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மீது நகர் போலீசில் புகார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இ.கம்யூ., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழுவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,teachers ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்