×

வள்ளலார் தினம்: பிப்.8ல் டாஸ்மாக் விடுமுறை

தேனி, பிப். 6: வள்ளலார் தினத்தையொட்டி நாளை மறுநாள் (பிப்.8)டாஸ்மாக் மதுபான சில்லறைக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழக அரசு, பிப். 8ம்தேதி வள்ளலார் தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற பார்கள், தனியார் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் எனவும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை மறுதினம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், தனியார் உரிமம் பெற்ற பார்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்கள் மூடப்பட உள்ளது. அன்றைய தினம் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Vallarlar Day ,Task Force Holidays ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு