×

தினசரி காய்கறி சந்தையில் புதிய சீரமைக்கப்பட்ட நடைபாதை திறப்பு

மூணாறு, பிப்.6:மூணாறில் பழமை வாய்ந்த தினசரி காய்கறி சந்தையில் 10 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட புதிய நடைபாதை திறக்கப்பட்டது. மூணாறில் பழமை வாய்ந்த காய்கறி சந்தையா உள்ளது. இந்த சந்தையில் மூணாறில் உள்ள அனைத்து தோட்டத்தொழிலாளர்கள், உணவு விடுதியினர் காய்கறிகளை தினந்தோறும் வாங்கி சென்று வருகின்றனர். தினமும் ஏரளமான பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில் நடைபாதைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதன் காரணமாக சந்தைக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வந்தனர். மேலும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சியின் இடுக்கி தொகுதி பஞ்சாயத்து உறுப்பினர் நெல்சன் நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் செலவு செய்து புதிய நடைபாதை அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது . சந்தைக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. காங்கிரஸ் துணைத்தலைவர் மணி புதிய நடைபாதையை திறந்து வைத்தார் தொகுதி உறுப்பினர் நெல்சன் தலைமை வகித்தார். பழனிச்சாமி வரவேற்றார். காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஜி. முனியாண்டி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஏரியா செயலாளர் கே.கே விஜயன், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags : sidewalk opening ,
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா