×

மதநல்லிணக்க திருவிழா

சாயல்குடி, பிப். 6: முதுகுளத்தூர் அருகே காக்கூர் நாகூர்ஆண்டவர் பழமையான தர்ஹாவில் இந்து-முஸ்லீம் மக்கள் இணைந்து கொண்டாடிய சந்தனகூடு திரு விழா கொண்டாடப்பட்டது.முதுகுளத்தூர் அருகே காக்கூரில் சுமார் 300 ஆண்டு பழமையான நாகூர்ஆண்டவர் தர்ஹா உள்ளது. இங்கு இந்து-முஸ்லீம் மக்கள் இணைந்து ஆண்டு தோறும் தை மாதத்தில் வரும் வளர்பிறையில் சந்தனகூடு திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த ஜன 26ம் தேதி தர்ஹாவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.கதையன் கிராமத்திலிருந்து சந்தன செம்பு எடுத்து வரப்பட்டு காக்கூர் தர்ஹாவில் வைத்து 10 நாட்கள் வழிபாடு செய்யப்பட்டது. உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு, இந்து-முஸ்லீம் மக்களின் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. பிறகு தர்ஹாவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பிறைவடிவ பச்சை போர்வை போர்த்தப்பட்டு, மல்லிகை பூ சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சவ்வாது, சந்தனம், அக்தர் தெளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு பொதுவாக சமைக்கப்பட்டு பொதுஅன்னதானம் வழங்கப்பட்டது.  முதுகுளத்தூர் பகுதியில் சமுதாய நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!