×

திருமங்கலம் அருகே மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை

திருமங்கலம், பிப். 6: திருமங்கலம் அருகே மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இளம்பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது. திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரினை சேர்ந்த அழகர்சாமி மகள் தேவிபாலா (20). இவருக்கும் உறவினர் ஒருவருக்கும் திருமணம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதற்காக கடந்த ஜன.30ம் தேதி மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து சென்றுள்ளனர். தேவிபாலா மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என கூறி திருமணத்திற்கு மறுத்ததாக தெரிகிறது ஆனால் பெற்றோர் வற்புறுத்தியுதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியடைந்த தேவிபாலா வீட்டில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து அவரை மீட்டு டூவிலரில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தேவிபாலா நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Tags : suicide ,groom ,Thirumangalam ,
× RELATED மேம்பாலத்திலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி