×

ஆலம்பாடி ஊராட்சியில் 3 ஆண்டாக காவிரி குடிநீர் கிடைக்கவில்லை ஊராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புகார்

குஜிலியம்பாறை, பிப்.6: ஆலம்பாடி ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி குடிநீர் கிடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆலம்பாடி ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரி குடிநீர் வசதி கிடைக்காமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காவிரி குடிநீர் கிடைக்க குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று ஆலம்பாடி திமுக கவுன்சிலர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

இதே போல் காவிரி குடிநீர் கிடைக்காத பிற ஊராட்சி பகுதிகளிலும் காவிரி குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து பள்ளி கட்டிட பராமரிப்பு, மின்கம்பம் மாற்றியமைத்தல், தார்ச்சாலை வசதி, பகுதி நேர ரேஷன் கடை பராமரிப்பு, பயணியர் நிழற்குடை பராமரிப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் திமுக கவுன்சிலர் சீனிவாசன் எழுப்பிய கேள்வியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதற்கு பதிலளித்த குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஆலம்பாடி ஊராட்சியில் காவிரி குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோல் காவிரி குடிநீர் கிடைக்கப் பெறாத பகுதிகளிலும், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cauvery ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை