×

இழுவை திறன் குறைவால் குன்னூர் மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதம்

குன்னூர், பிப். 6:   என்ஜினில் இழுவை திறன் குறைந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் 1 மணி நேரம் தாமதமாக குன்னூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மலை ரயில் உள்ளது. இந்த மலை ரயில் நூற்றாண்டு பழைமை வாய்ந்தது என்பதால், இதில் பயணிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் இந்த மலை ரயில் பல்வேறு மலைக்குகைகள் வழியே பயணம் செய்கிறது. மலைப்பாதையில் உள்ள இயற்கை வளங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு குன்னூர் வரவேண்டிய மலை ரயில் என்ஜினில் இழுவை திறன் குறைந்ததால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்திற்கு வந்தது.

Tags : hill train ,Coonoor ,
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...