×

நல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் தீ

பொள்ளாச்சி, பிப். 6:  பொள்ளாச்சி அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கில்  தீ பிடித்தது. இதில் ஏற்பட்ட புகையால் கிராம மக்கள் அவதிப்பட்டனர். அதில் பலரும், தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெறியேறினர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட  36 வார்டுகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள்,  பாலக்காடு ரோடு நல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. சுமார் 17 ஏக்கரில் ஒருபகுதியில் மக்கும் குப்பைகள் உரம் தயாரிக்கவும், மக்கா குப்பைகள் தனியாகவும் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த  குப்பை கிடங்கை சுற்றிலும், விவசாய பகுதி மட்டுமின்றி குடியிருப்புளும் அதிகளவு உள்ளன. குப்பை கிடங்கில் அவ்வப்போது, மர்மநபர்கள் தீவைத்து சென்று விடுவதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறிவிடுகிறது. இதுகுறித்து, பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இந்நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர், கிடங்கில் உள்ள குப்பைகளுக்கு தீ வைத்து சென்றதால் தீ கொளுந்து விட்டு எரிந்தன. நேரம் செல்ல செல்ல தீ பரவியதுடன், குப்பையிலிருந்து வெளியேறிய புகையானது சுமார் 150 அடிக்கு மேல் சென்றது. மேலும், அவ்வப்போது பலமாக அடித்த காற்றால், அப்பகுதி முழுவதும் பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த புகை நாள் முழுவதும் காற்றில் பறந்தவாறு இருந்தது. குப்பை கிடங்கில் இருந்து கிளம்பிய நச்சு தன்மையுள்ள  புகையானது,  நல்லூரை சுற்றியுள்ள குடியிருப்புகளை சூழ்ந்து. வானம் மேகம் மூட்டம்போல் இருந்தது. இந்த நிலையில்,  அப்பகுதி மக்கள் புகை மூட்டத்தால் அவதிப்பட்டதுடன், ஒருக்கட்டத்தில் பூட்டை விட்டு வெளியேறினர்.  புகை குறைந்த பிறகே வீட்டிற்கு வந்துள்ளனர். அந்த அளவிற்கு, குப்பை கிடங்கிலிருந்து வெளியேறிய புகையால், நல்லூர் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.  இதுகுறித்து கிராம கூறுகையில், ‘பொள்ளாச்சி நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. அந்நேரத்தில் அதிலிருந்து வெளியேறும் கரும் புகையால் அவதிப்படுகிறோம். சுகாதாரமற்ற புகையால், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பலரும் ஆஸ்துமா உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குப்பை கிடங்கில் ஏற்படும் தீயை விரைந்து அணைப்பதுடன்,  அதிலிருந்து புகை கிளம்புவதை தவிர்க்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : garbage warehouse ,Nallur ,
× RELATED கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண்...