×

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்


பொள்ளாச்சி, பிப். 6:  கேரள மாநிலத்துக்கு, சீனாவிலிருந்து வந்த மூன்றுபேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கேரள மாநில எல்லைக்குக்குட்பட்ட பகுதியில் சுகாதார பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பொள்ளாச்சி கேரள மாநில எல்லையில் இருப்பதால், கேரளாவிலிருந்து பொள்ளாச்சி வழியாக தமிழகத்தின் பிற மாவட்டத்திற்கு செல்வோருக்கு, கோபாலபுரம், நடுப்புணி, வளந்தாயமரம் உள்ளிட்ட பல்வேறு சோதனை சாவடிகளில், சுகாதாரத்துறை மூலம் கொரோனா வைரஸ் குறித்து விரிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக அப்பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நேற்று, பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் பகுதியில், நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குழுவினர், கேரள மாநில பகுதியிலிருந்து வந்த வாகனங்களை நிறுத்தி, கொரோனா வைரஸ் குறித்த வாசகங்கள் மற்றும் நோயை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த, விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.    மேலும், ஒரு வகை காய்ச்சல் போன்று இருப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வானது, இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Coronavirus Awareness Camp ,border ,Tamil Nadu ,Kerala ,
× RELATED தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு;...