×

நாட்றம்பள்ளி அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

நாட்றம்பள்ளி, பிப்.4: நாட்றம்பள்ளி அருகே 13வயது சிறுமிக்கு, இளைஞருக்கும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த திருமணத்தை மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி செத்தமலை வட்டம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் ரமேஷ்(27). இவருக்கு ஆந்திரா மாநிலம் குப்பம் அடுத்த செம்மன்குழி பகுதியை சேர்ந்த ராமன் மகள் காமாட்சி(13) என்பவருக்கும் திருமணம் நடத்துவதாக பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமி மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலருக்கு போனில் ரகசிய தகவல் கொடுத்தார். அதன்பேரில் வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் ராஜாமணி நேற்று பச்சூர் பகுதிக்கு விரைந்து திருமணம் செய்து கொள்வதாக இருந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர்களை அழைத்து சென்று விசாரணை செய்து, திருமணத்தை நிறுத்துவதாக எழுதி வாங்கிக்கொண்டு, குழந்தை திருமணம் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Nattarampally ,
× RELATED திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர்...