×

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுத்தை குட்டி மீட்பு

* சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்


பேரணாம்பட்டு, பிப்.4: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பாதை வழி அருகே விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த சுமார் மூன்றரை வயது சிறுத்தை குட்டி ஒன்று இந்த நிலத்தில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. நேற்று காலை விவசாய நிலத்திற்கு வந்த நிலத்தின் உரிமையாளர் வெங்கடேசன், தண்ணீர் தொட்டியில் சிறுத்தை குட்டி விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரகர் சங்கரய்யா, வனவர் அரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், மாவட்ட வன அலுவலர் பார்கவ தேஜா மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, கால்நடை மருத்துவர் ரமேஷ், தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து ஏணி மூலம் சிறுத்தை குட்டியை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.

Tags : Peranampattu ,water tank ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...