×

வேலூர் மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் முருகன் கோர்ட்டில் ஆஜர்

*வரும் 17ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு


வேலூர், பிப்.4: வேலூர் மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வரும் 17ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 18ம் தேதி முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் ஜேஎம்1 கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு நேற்று வேலூர் ஜேஎம் 1 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்காக வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் தலைமையிலான போலீசார், சிறையில் இருந்த முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் முருகனை மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Murugan ,Vellore Central Jail ,
× RELATED பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த...